கார்கள் மீது தீவிர அபிமானம் கொண்ட ஒருவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக அவரது பூதவுடல் சவப்பெட்டிக்கு பதிலாக காரொன்றில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் வட சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஹெபி மாகாணத்திலுள்ள பவோடிங் நகருக்கு அண்மையிலுள்ள கிராமமொன்றில் கி என சுக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி நபர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அவர் தனது உயிலில் தனது பூதவுடல் பாரம்பரிய முறைப்படி சவப்பெட்டியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படாது காரொன்றில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் அவரது ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் 10,000 யுவன் (1,173 ஸ்ரேலிங் பவுண்) விலையை செலுத்தி ஹையஹண்டாய் சொனாட்டோ காரொன்றை வாங்கி, அதற்குள் கியின் பூதவுடலை வைத்து பாரிய கல்லறைக்குள் அந்த காரை இறக்கி மண்ணால் மூடி நல்லடக்கம் செய்தனர்.