(எம்.எம்.மின்ஹாஜ்)

கட்சியின் மறுசீரமைப்பு குறித்து நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அரசாங்கத்தை பற்றி என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் 100 வேலைத்திட்டம் சம்பந்தமாக பேசிய விடயத்தை நானும் ஏற்கின்றேன். அது உண்மையில் பிரயோசனமில்லாத வேலைத்திட்டமாகும். இந்த திட்டத்தை கொண்டு வராமல் இருந்திருக்கலாம். 

அதனை தவிர ஜனாதிபதியின் கேள்விக்கு நான் பதிலளிக்க போவதில்லை. ஜனாதிபதியின் கருத்துகள் சம்பந்தமாக செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவில்லை.

அத்துடன் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என்றார்.