அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றேன்- சரத்பொன்சேகா

Published By: Rajeeban

31 May, 2018 | 03:17 PM
image

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள  முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தேவைப்பட்டால் அதனை வட்டியுடன் திருப்பிகொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வர்த்தகர்கள் பணம் வழங்குவது வழமையான விடயம் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இலங்கையில் மாத்திரம் அல்ல உலகின் வேறு பகுதிகளிலும் இந்த நடைமுறை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நான் திறைசேரி பிணைமுறி மோசடி மூலம் பணம் பெற்றுக்கொண்டேன் என எவரும் தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா வர்த்தகர்களிடம் இருந்து பெறும் பணத்தை நாங்கள் சிறிய தேவைகளிற்கு  பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்பிரச்சார நடவடிக்கைகளிற்கு தேவைப்படும் போது நாங்கள் பணம் பெறுவது வழமை இது இலஞ்சம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து 2005 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஐந்து இலட்சம் வழங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பணம் வழங்குபவர்கள் சில நன்மைகளை எதிர்பார்ப்பது வழமை ஆனால்  நன்மைகளை பெறுவதற்காக சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபடுபவன் நான் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08