தமிழகத்தில் வன்முறைகளை தூண்டுவோர்களையும், வன்முறையில் ஈடுபடுவேர்களையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது, பயங்கரவாத்தை தமிழகத்தில் தலைதூக்கவிடமாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

அமைதி வளம் வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்த அரசு சென்றுகொண்டிருக்கிறது. வன்முறையாளர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைவரும் போது தான் யார் மீது தவறு என்பது தெரியவரும்.

ரஜினிக்கும் முதல்வருக்கும் ஒரேயிடத்திலிருந்து உத்தரவுகள் வருவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை.

எங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. மாற்றான் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு எடுபிடியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. தி.மு.க. வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்.’ என தெரிவித்துள்ளார்.