காணமாமல்போன காத்தான்குடியைச் சேர்ந்த 4வயது சிறுவன் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக ஆரையம்பதி பழைய கல்முனை வீதியில் பல மணித்தியாலங்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்டதுடன் குறித்த சிறுவனின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நேற்று மாலை 4.00 மணியளவில் காத்தான்குடி மீரா பள்ளி வீதியைச் சேர்ந்த 4 வயதுடைய யாஸ் பசாலி என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் யோயுள்ளான்.

தந்தையின்றி தாயுடன் மாத்திரம் வாழ்ந்து வரும் இச்சிறுவனை தேடியபோது சில மைல் தூரத்திலுள்ள ஆரையம்பதி பழைய வீதியில் குறித்த சிறுவன் அணிந்திருந்த ஆடை களற்றப்பட்ட நிலையில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். 

பின்னர், ஆரையம்பதி மக்கள் சிறுவனுக்கு ஆடை கொடுத்து உதவியுள்ளனர்.

சிறுவனை தாயிடம் கொண்டு சென்ற பொலிஸார் தாயை கைது செய்து பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தியதுடன் பள்ளிவாயல் நிருவாகிகளை வரவழைத்து அவர்களின் முன்னால் தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

- ஜவ்பர்கான்