சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு கொடி தினம் சமுர்த்தி திணைக்களத்தினால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று  நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்போது முதலாவது சமுர்த்தி கொடியினை, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.சுதர்சினி அணிவித்து கொடிதின நிகழ்வினை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

 குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. எஸ்.சுதர்சினி, மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கணக்காளர் எம்.எஸ்.பஸீர் மற்றும் மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.