பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை 10 இலட்சம் ரூபா சரிரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளரை தாக்கியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவும் அவரது சகோதரரும் இன்று  புத்தளம் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீதிவான் சனத் நிஷாந்தவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன் அவரின் சகோதரரை எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.