வெலிமடை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்று தீ பிடித்தமையினால் அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை தீ பிடித்துள்ளதுடன்,வர்த்தக நிலையத்திற்குள்ளே  உறங்கிக் கொண்டிருந்த வர்த்தக நிலையத்தின்  உரிமையாளரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .

 தீ பிடித்தமைக்கான காரணங்கள் இது வரையில் அறியப்படவில்லை. 

குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொண்டவேளை தீ காயங்களினாலே உயிரிழந்துள்ளதாக அறியவந்துள்ளது.