கோத்தபாய வேட்பாளரா? மகிந்த அணிக்குள் குழப்பம்

Published By: Rajeeban

31 May, 2018 | 11:35 AM
image

 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ராஜபக்ச அணிக்குள் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளன என கலாநிதி விக்கிரமபாகுகருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தால் அது மீண்டும் அதிகாரத்திற்கு வரும் மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பை பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்சவும் அவரது நண்பர்களும் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்க்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றாலும் தான் அதிகாரத்திற்கு வருவதை இது பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்ச இதனை எதிர்க்கின்றார், இதன் காரணமாக மகிந்த அணிக்குள் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனக்கு வழிவிடக்கூடிய ஓருவரை நிறுத்தவேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு உள்ளது.

மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதற்கு அவசியமான அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடிய ஒருவரையே அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றார்.

இதேவேளை அதிகார ஆசை இல்லாதவராகவும், மகிந்த ராஜபக்சவினால் இலகுவாக கையாளப்படக்கூடியவராக உள்ள அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவை நிறுத்தவேண்டும் என மகிந்த அணியை சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.

இதேவேளை பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கவரக்கூடிய கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடும் மகிந்த அணிக்குள் காணப்படுகின்றது.

 தற்போதைய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மீது சேறு பூசும் பிரச்சாரமும் இடம் பெறுகின்றது என விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி...

2024-09-20 16:45:46
news-image

மட்டு. வவுணதீவு பகுதியில் இரண்டு கைக்குண்டுகள்...

2024-09-20 16:39:17
news-image

மொனராகலையில் பஸ் விபத்து ; 17...

2024-09-20 16:34:57
news-image

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் - பொதுஜனபெரமுன...

2024-09-20 16:06:07
news-image

வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார்...

2024-09-20 16:47:41
news-image

அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு...

2024-09-20 16:11:17
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்க...

2024-09-20 15:55:47
news-image

ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமையால்...

2024-09-20 16:49:42
news-image

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை  திறப்பு

2024-09-20 15:43:11
news-image

பண்டாரகமை - களுத்துறை வீதியில் விபத்து...

2024-09-20 15:11:24
news-image

வீடொன்றுக்குள் நுழைந்து வாக்காளர் அட்டைகளை எடுத்துச்...

2024-09-20 16:01:57
news-image

யாழில் பால் புரைக்கேறியதில் 12 நாட்களே...

2024-09-20 14:35:23