நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் நால்வரும் நேற்று மாலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு எதிர்வரும் மார்ச்  1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.