(எம்.எப்.எம்.பஸீர்)

கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் மற்றும் ஆடுகள நிர்ணயம் போன்ற மோசடிகளை இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் கடும் தண்டனை பெறத்தக்க குற்றங்களாக உள்வாங்கும் வகையில் விரைவில் திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையானது தனியார் நிறுவனமாகவே பார்க்கப்படுகின்றது. கிரிக்கெட் ஊழியர்கள் அரச ஊழியர்கள் இல்லை. எனவே தற்போது நடைமுறையில் உள்ள இலஞ்ச ஊழல் சட்டம் அவர்கள் தொடர்பில் நேரடியாக தாக்கம் செலுத்தாது.

இந் நிலையில் தனியார் துறைக்கும் தாக்கம் செலுத்தும் வகையில் இலஞ்ச ஊழல் சட்டத்தை திருத்தி இலங்கை கிரிக்கெட் சபையையும் அச் சட்டத்தில் உள்வாங்க விரைவில் திருத்தம் கொண்டுவரப்படு வேண்டும்.

கிரிக்கெட் மட்டுமன்றி ஏனைய விளையாட்டுக்கள் தொடர்பிலும் எதிர்க்குழுவை போட்டியாளரை வெற்றியடைச் செய்ய முன்னெடுக்கப்படும் அனைத்து பிக்சிங் நடவடிக்கைகளையும் தண்டனைக்குரிய குற்றமாக இலஞ்ச ஊழல் சட்டத்தில் உள்வாங் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.