(ஆர்.யசி)

நாட்டின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­ னைகள் மற்றும் எதிர்­கால இலக்­கு­ களை அடை­வதில் சகல தரப்­புக்­களும் இணைந்து பய­ணிக்க வேண்டும். இதில் தமிழ் மக்­களின் பங்­க­ளிப்­புடன் ஐக்­கி­ய­மான பய­ணத்தை அனை­வ­ரு­மாக உரு­வாக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சுயா­தீன அணி­யி­ன­ரிடம்   வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்த நாட்டின் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வதில் சிறு­பான்மை மக்­களின் பங்­க­ளிப்பு அவ­சியம். அதேபோல் மக்­களின்

தெரிவு இருந்தால் தான் அது ஜன­நா­யக பய­ண­மாக அமையும் என்­பதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் சம்­பந்தன்  தெரி­வித்­துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யினர் நேற்று எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். 

சந்­திப்பில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அடுத்­த­கட்ட நகர்­வுகள், 16 பேர் கொண்ட குழு­வினர் முன்­னெ­டுக்கும் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் குறித்தும் இரு தரப்­பினர் இடையே ஆழ­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

இதில் எதிர்க்­கட்சி தலைவர் தரப்பில் பல விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.  குறிப்­பாக     நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு  நிரந்­தர தீர்­வுகள் பெற்­று­கொள்­ளப்­ப­டு­வ­தற்­காக    சிங்­கள மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதை    குறிப்­பிட்­டுள்ளார். 

நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்வு காண  உரு­வாக்­கப்­படும் புதிய அர­சியல் அமைப்பு நாட்டு மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வுடன் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழர்  தரப்பின் நிலைப்­பாடு என்­பதில் தாம் உறு­தி­யாக உள்­ள­தா­கவும்  ,  அதேபோல் இந்த நாட்டின் எதிர்­கால அர­சியல் பய­ணங்­களில் அனை­வரும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்றும் சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார். பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களில் இரு தரப்­பிற்கும் இடம் கொடுக்­காது பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்­ப­தையும்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 பேர் கொண்ட மாற்று அணி­யி­ன­ரிடம்  எதிர்க்­கட்சி தலைவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார் .  

மேலும்  இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும்  இணைந்து செயற்­ப­டுவோம். அத்­துடன் நாட்­டினை துண்­டாட, குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தில் வாழவும் ஒரே நாட்­டுக்குள் அனை­வரும் சமத்­து­வ­மாக வாழவும் இலங்­கை­ய­ராக சர்­வ­தேச நாடு­களில் பங்­கு­கொள்­ளவும் தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும் என்றும்  சம்­பந்தன்  சுதந்­திரக் கட்­சியின் மாற்று அணி­யிடம்   வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

ஆகவே ஒரே நாட்­டுக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொண்டு வாழவே நாம் விரும்­பு­கின்றோம். அத்­தோடு எமது எதிர்­கால அர­சியல் பய­ணத்தில் எமது இலக்­கு­களை வெற்­றி­கொள்ள, தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள அனைத்து தரப்பும் இணைந்து பய­ணிப்போம், இதில் எதி­ர­ணியில் செயற்­படும் அணி­யி­னரின் ஒத்­து­ழைப்­பு­களும் அவ­சியம் என்­பதை  சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

மேலும்  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்னணி கொண்டுவந்துள்ள  20 ஆம் திருத்தம் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போதும் சிறுபான்மை மக்களின் பூரண ஆதரவுடன் அல்லது அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்துகொண்ட தலைமைகள் நாட்டினை ஆளவேண்டும். மாறாக ஒரு சிலரது நிலைபாடுகளில் இருந்து தலைமைகளை தெரிவு செய்வது ஜனநாயகத்திற்கு பொருத்தமற்றது என்பதையும்  எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.