பம்பரகந்த நீர்வீழ்ச்சியிலிருந்து உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த இளைஞனே, திடீரென நீர்வீழ்ச்சியில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகளும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன், தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சனோஜ் மிஹிரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹல்தும்முல்ல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.