தமது கடைசி  டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பிரண்டன் மெக்கலம், டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதி வேகமான சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

 அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமானது.

 இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி,சகல விக்கட்டுகளையும் இழந்தது 370 ஓட்டங்களை பெற்றது.

 இதன்போது நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கலம், 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து, டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதத்தைப் பெற்ற வீரராக பதிவானார்.

 இதற்கு முன்னர் இந்த சாதனையை 56 பந்துகளில் மேற்கிந்திய தீவுகளின் விவ் ரிட்சஸும், பாகிஸ்தானின் மிசப் அல் ஹக்கும் பதிவு செய்திருந்தனர்.

 இந்த போட்டியில் ப்ரண்டன் மெக்கலம் 79 பந்தில் 21 பவுண்டரி, 6 சிக்சர்கள் என  145 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழந்தது  57 ஓட்டங்கள் எடுத்துள்ளது.