கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்கு குரல் கொடுத்த ஐ.நா

Published By: Digital Desk 7

30 May, 2018 | 02:18 PM
image

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

குறித்த 7 பெண்களும் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை சவுதி அரசாங்கம் தெளிவு படுத்த  வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பேச்சாளர் எலிசபெத் த்ரொஸ்செல் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவிருந்த நிலையில் ஆறு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காரணம் குறிப்பிடப்படாது கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச சக்திகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு வந்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

பெண்கள் ஏதேனும் செயல்களையோ அல்லது தீர்மானங்களையோ மேற்கொள்வதற்கு ஆண்களின் அனுமதியை கோர வேண்டும் என்பதற்காக கடுமையான சட்டங்கள் சவுதியில் காணப்படுகின்றன.

திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு செல்வது ஆகியவற்றிற்கும் சவுதியில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தடை அண்மையில் தளர்த்தப்பட்டது. அந்த வரிசையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47