பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  ரயில்வே ஊழியர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேதங்கள் குறித்து  ரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ரயில்பெட்டிகளிற்கும் இயந்திரங்களிற்கும் சேதமேற்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே திணைக்களத்தின் சொத்துக்களிற்கும் பொதுச்சொத்துக்களிற்கும் சேதம் ஏற்படுத்துபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரியொருவர் எச்சரித்துள்ளார்.

ரயில்வே திணைக்களம் இது தொடர்பில் விசேட உள்ளக விசாரணையை மேற்கொள்ளவுள்ளது என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏற்படுத்தியுள்ள சேதங்கள் காரணமாக பல ரயில்சேவைகள் தாமதமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.