அம்பாறை, பரகஹகெலே பிரதேசத்தைச் சேர்ந்த விமானப் படை வீரரான 20 வயதுடைய இளைஞர் ஓருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இவர் றத்மலானை,விமானப் படை முகாமில் பணியாற்றும்  வீரராவார்.

மேலும், குறித்த விமானப் படை  முகாமின் படையினர் தங்கும் விடுதியில் வைத்தே அவர் தூக்கில் தொங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.