கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரதமும் கொள்கலன் ஒன்றும் முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரிகட்டிய பிரதேசத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் புகையிரதத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் கொள்கலன் குடைசாய்ந்துள்ளதுடன், புகையிரதத்தின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளன. 

இதன் காரணமாக புகையிரதத்தின் 2 சாரதிகள், கொள்கலனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தினால் புத்தளம் நோக்கிய ரயில் சேவைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதென்று முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.