4 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொழும்பு சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் (இந்திய கலாச்சார நிலையம்) யூபோனிக் யோகா (Euphonic Yoga) கலை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்தியாவின் ஸ்ருதி சத்துர்லால் சர்மா (Shruti Chathurlal Sharma ) மற்றும் அவரது குழுவினர் இந் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். 

இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு 7 இல் அமைந்துன்ன சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்விற்கு அனுமதி இலவசம் என்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களை சுவாமி விவேகானந்தா காலாச்சார நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என  இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.