இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாதிகளின் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் இன்றைய கூட்டத்தில் ஆலாசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாலஸ்தீன திவிரவாதிகள் நேற்று காசா பகுதியில் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதில் ஒரு பீரங்கி குண்டு முன் பள்ளிகூடம் ஒன்றில் விழுந்துள்ளது.

இந் நிலையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இஸ்ரேல் மீது முன்னறிவிப்பில்லாமல் ஏவுகணைகளை கொண்டு பாலஸ்தீன தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலுக்கு ஐ.நா சபை கடுமையான முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா சபை இஸ்ரேல் மீது நடந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பாக கூட்டம் ஒன்றை இன்று நடத்தவுள்ளது.

நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதல் 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக பெரிய தாக்குதலாகும்.