கடந்த அரசாங்கத்தின் ஊழ்வாதிகளையும், திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடங்களாகவும் திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்கதெரிவித்துள்ளார்.
நேற்று கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற 'கமே பன்சல கமட சவிய' என்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,'திருடர்களை பிடிப்போம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
மக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள், காரணம் திருடர்களை பிடிக்கவே.ஆனால் அதை இன்னும் ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை. இது நாட்டுக்கு துரதிஷ்டமே. அதனால் தான் இன்று திருடர்கள் வீரர்களாகவும் வீரர்கள் திருடர்களாகவும் உள்ளனர்.
கடந்த அரசங்கத்தில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்கள் இன்று சுகந்திரமாக உள்ளனர்.
மூன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எம்மால் இன்னும் கடந்த கால திருடர்களை பிடிக்க முடியாமால் உள்ளது.
ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக உள்ளது காரணம் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள திருடர்களையாவது பிடிக்க முடிந்தமை.
குறிப்பாக அர்ஜுன அலோசியஸ்சிடம் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களை கட்டாயமாக மக்கள் முன் வெளிக்கொண்டு வரவேண்டும்.
உண்மையில் கூச்சல் போட்ட சிலரின் உண்மையான முகம் தற்போது வெளிவந்துள்ளது.'என்றார்.
20ஆவது திருத்தம் தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,'20 ஆவது திருத்தம் பற்றி தற்போது சரியான முடிவை எடுக்க முடியாது.
ஆனால் நாட்டுக்கு முக்கியம் நாட்டு மக்கள் விரும்பும் அரசியல்லமைப்பேயாகும்.நான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைக்கு எதிரானவன் அல்ல.
ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையில் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு.
அந்த பதவியில் அமரும் நபர் தமது அதிகாரங்களை தவறாகவும் பயன்படுத்தலாம் அல்லது சரியான முறையிலும் அமுல்படுத்தலாம்.
ஆகவே அது நபரை பொருத்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தீயதா நல்லதா என குறிப்பிட்டு கூறமுடியாது.நாட்டின் பாதுகாப்புக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே மிக அவசியமாகும்.'என்றார்.