காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உணவு விசமானதால் சுமார் 35 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் இன்று முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள உணவு தயாரிப்பு நிலையமொன்றில் உணவு பார்சல்கள் பெறப்பட்டு அவற்றை சாப்பிட்டதாகவும் அதன் பின்னர் காய்ச்சல் தலைசுற்று வாந்தி மயக்கம் போன்றன ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தினால் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் இளைஞர்கள் என பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- ஜவ்பர்கான்