பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவை  தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய புகையிரத  சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்கள் கட்டாயமாக சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என புகையிரத  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 எனினும், அதிகாரிகள் தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களாயின், அடையாள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத  தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

 இந் நிலையில், பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு பணிக்கு சமுகமளிக்குமாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக புகையிரத  முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.