திருகோணமலை விமானப்படை முகாமில் இருந்து துப்பாக்கியுடன் தப்பி ஒடிய விமானப்படை வீரர் மட்டக்களப்பில் அவரது  வீட்டில் வைத்து நேற்று   இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு  பொலிசார் தெரிவித்தனர்.

திருகோணமலை சீனக்கடா விமான நிலையத்தில் கடமையற்றி வந்த மட்டக்களப்பு பெரியமடு பிரதேசத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் வழமைபோல விமானப்படை முகாமில் உள்ள பாதுகாப்பு அரணில் பாதுகாப்பு கடமைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்ற காலையில் அவர் குறித்த அரண்பாதுகாப்பில் இல்லாததையடுத்து அவரை தேடியபோது அவர் துப்பாக்கியுடன் தப்பிஓடியுள்ளதாக தெரியவந்ததையடுத்து அவர் தொடர்பாக கப்பல் துறை பொலிஸ் நிலையத்தில் விமானப்படையினர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானப்படையினரும் பொலிசாரும் தப்பியோடிய விமானப்படை வீரரை தேடிவந்த நிலையில் அவரை மட்டக்களப்பு பெரியமடு பிரதேசத்திலுள்ள  அவரது வீட்டில் நேற்று கைது செய்ததுடன் துப்பாக்கியுடன் ரவைகளையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.