(எம்.சி.நஜிமுதீன்)

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழிநுட்ப சேவைச் தொழிற்சங்கம் இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது. 

எனினும் இன்றைய ரயில் போக்குவரத்து எவ்வித பாதிப்புமின்றி வழமைபோல் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே தொழில்நுட்ப சேவைச் தொழிற்சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித தெரிவிக்கையில்,

இத்தொழிற்சங்கப் போராட்டத்தில் ரயில்வே இயக்குனர்கள், தொழிநுட்பபிரிவு, பழுது பார்த்தல் பிரிவு, தொழில்நுட்ப அதிகாரிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். 

12 சதவீத சம்பள அதிகரிப்பு, ஏனைய கொடுப்பனவுகள் உட்பட நீண்ட காலமாக நிலவிவரும் எமது பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டுள்ளோம். எனினும் இதுவரையில் எமக்கு உரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

இது குறித்து போக்குவரத்து துறை பிரதியமைச்சர் அஷோக அபேசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினோம். அப் பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்கவில்லை. அதனாலேயே இன்று மாலை 4 மணிமுதல் 48 மணிநேர பகிஷ்கரிப்பில் ஈடுபட ஆரம்பித்தோம் என்றார்.