(இரோஷா வேலு) 

பாணந்துறை வடக்கு லங்கம பிரதேசத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான இரண்டு துப்பாக்கி ரவைகளுடன் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு இணங்கவே பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்கம பிரதேசத்த‍ை சுற்றிவளைத்த அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தங்கம, பிடிகல, பிளியந்தல மற்றும் மீகஹதன்ன போன்ற இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,