யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியில் மன்னார் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர். 

மன்னார் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இவர்களில் ஜேம்ஸ் மெக்சி (23) மற்றும் சதாசிவம் கஜேந்திரன் (30) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் ஆர்.ரவிக்குமார் என்பவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

(வாஸ் கூஞ்ஞ)