பெண்கள் மாதவிடாய் காலங்களில் சரிவர உணவு உட்கொள்ளாமையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாற்பது சதவீதத்திற்கு மேலாக பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய புரிதலோ, போதிய விழிப்புணர்வோ இல்லை என்று கண்டறியப்பட்டது.

மாதவிடாய் காலங்களில் உடலை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவில்லை என்றால் நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் உண்டு அதே நேரம் குழந்தையின்மை பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

அதே போல் மாதவிடாய் காலங்களின் போது பெண்கள் அதிகளவிற்கு தண்ணீர் அருந்தவேண்டும். இதனால் அடிவயிற்று வலி குறையும். விற்றமின் சத்து அடங்கிய தோடம் பழங்கள், மீன், தர்ப்பூசணி, கீரை போன்றவற்றையும், கல்சியம் சத்துகள் அடங்கிய பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் பருப்பு ஆகியவற்றையும் உட்கொள்ளவேண்டும்.

ஒரு சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம். சொக்லெட் உட்கொள்வதன் மூலம் இதற்கு நிவாரணம் தேடலாம். அதே தருணத்தில் கொழுப்பு சத்து அதிகமுள்ள வெண்ணெய், கிரீம் களை முற்றாக தவிர்க்கவேண்டும்.

ஒரு சிலர் மாதவிடாய் காலங்களில் சரிவர உணவு உட்கொள்ளாமையால் சோர்வையும், உடல் பலவீனத்தையும் தரும்.

 பட்டாணி, கோதுமை. கொய்யா போன்றவற்றை அவசியம் உட்கொள்ளவேண்டும்.