இயற்கை அனர்த்ததையடுத்து எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார பரிசோதகரகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெள்ள நீர் ஏற்பட்ட பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ளவேண்டும் என்றும் சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும்  அவர் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், அப்பகுதிகளை நன்றாகத் தூய்மைப்படுத்திய பின் குறித்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன், வீடுகளை சுத்தப்படுத்திக்கொள்வதற்காக,    011-2635675 என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர்த் தாங்கிகளையும் சுத்தம் செய்யுமாறும் கொதித்தாரிய நீரை மாத்திரம் பொதுமக்கள் அருந்த வேண்டும்.

இதேவேளை, வெள்ள அனர்த்தத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உணவு பொருட்களை சுகாதார முறையில் விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.