(இரோஷா வேலு) 

ஹெரோயின் போதைப்பொருளுடன் கிரான்பாஸ் பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளவத்தை வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கிரான்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆவது ஒழுங்கைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெள்ளவத்தை வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் பெண்ணெருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் கிரான்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணெருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இவ்வாறு குறித்த சந்தேகநபரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த  10 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டும் மற்றும் 21 கிராமும் 430 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டப்டார். இதன்போது நீதவான் அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.