(இரோஷா வேலு) 

மாளிகாவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவரை நேற்று இரவு கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மாளிகாவத்தை குடியிருப்பு பகுதிக்கருகில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 38 வயதுடைய மாளிகாவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

குறித்த பெண்ணை கைதுசெய்யமுற்பட்ட வேளையில் அவரிடமிருந்து கொக்கெயின் போதைப்பொருள் 9 கிராம், ஹைஸ் போதைப்பொருள் 6 கிராமும் 100 மில்லிகிராம் மற்றும் செயற்கை போதைப்பொருள் குளுசைகள் 80 உம் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேக நபர் நேற்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.