தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

நேற்று கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து முதலில் துடுப்பாடி 134 ஓட்டங்களைப் பெற்றது.இங்கிலாந்து அணிக்காக புட்லேர் 32 ஓட்டங்களை பெற்றார்.தென்னாப்பிரிக்கா சார்பாக இம்ரான் தாஹீர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர் நிறைவடையும் போது 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.