கிளிநொச்சி கிராஞ்சி, இலவங்குடாப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 35 க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகளிலிருந்து எண்ணைக்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப் பகுதியிலுள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழிவதுடன் தமது கடற்றொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களின் படகுகளை நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இலவங்குடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இப் படகுகளிலிருந்து வெளியேறுகின்ற எண்ணெயக்கசிவினால் அப் பகுதியிலுள்ள கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்படைந்துள்ளதுடன். குறித்த இப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 45 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே குறித்த இந்த படகுகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றர்.