கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 17முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் வாகனமொன்றையும் முதிரை மரக்குற்றிகளையும் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு சுண்டிக்குளம் வீதியில் நேற்றிரவு  10 மணிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையின் போது முதிரை மரக்குற்றிகளுடன் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டது.

குறித்த வாகனத்தை வழிமறித்த பொலிஸார் அதனை சோதனையிட்ட போது, சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தை விட்டு தப்பியோடிய நிலையில், குறித்த வாகனத்தையும் பல இலட்சம் ரூபா  பெறுமதியான 17 முதிரை மரக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.