சட்டவிரோதமாக கட்டாரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 2 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த சிலாபத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரின் பயணப்பையில் இருந்து 10 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்தேக நபருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

(kapila)