நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் தம்புள்ளை, நாஉல, தெல்தெனிய, குண்டசாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளிலே தற்காலிகமாக மேற்படி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.