ரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள பிபா உலகக் கிண்ணத் தொடரை பார்க்க வரும் ரசிகர்களுக்கு விசா தேவையில்லை என அந் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரை  12 பில்லியன் டொலர் செலவில் இம்முறை ரஷ்யா நடத்துகின்றது.

ரஷ்யாவின் மொஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பார்க், கஸான் உள்ளிட்ட நகரங்களின் 12 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந் நிலையில் உலக கிண்ணப் போட்டிகளைக் காணவரும் ரசிகர்களுக்கு விசா தேவையில்லை. போட்டிக்கான அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரசிகர் அடையாள அட்டை ( Fan ID) ரஷ்யா அரசால் வழங்கப்படும். ரஷ்யா சென்று போட்டியை கண்டுகளித்து வெளியேறும் வரை இந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் கடவுச்சீட்டு அல்லாத பிற ஆவணங்கள், அனுமதிச் சீட்டு வாங்கியதற்கான சான்று போன்றவற்றை அவசியம் வைத்திருக்க வேண்டும் என்றும் அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.