உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்­தி­யாவில் நடக்­கி­றது. இதில், அதிக எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் இந்­திய – பாகிஸ்தான் போட்டி, மார்ச் 19ஆம் திகதி தர்­ம­சா­லாவில் நடக்­க­வுள்­ளது. ஆனால் பாது­காப்பு கார­ணங்­களை காட்டி, இந்த தொடரில் பங்­கேற்­பதை பாகிஸ்தான் இன்னும் உறுதி செய்­ய­வில்லை.

இந்­திய –பாகிஸ்தான் போட்­டியை பொது­வான இடத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி) கோரிக்கை விடுத்து வரு­கி­றது. இத­னி­டையே அர­சிடம் அனு­மதி பெற தொடர்ந்து முயற்சி செய்து வரு­வ­தாக, பி.சி.பி. தலைவர் ஷகா­ரியார் கான் கூறி­யுள்ளார்.

இது குறித்து அவர் கூறு­கையில், உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொட­ருக்­காக இந்­தி­யா­வுக்கு, பாகிஸ்தான் அணியை அனுப்­பு­வது குறித்து இது­வரை பாகிஸ்தான் அரசு அனு­மதி அளிக்­க­வில்லை. பாகிஸ்தான் அணியை அனுப்­பா­விட்டால், ஐ.சி.­சி.க்கு நாங்கள் அப­ராதம் செலுத்த வேண்டி வரும் என்­பது தெரியும். இது தொடர்­பாக பிர­தமர் நவாஸ் ஷெரீப்பின் செயலகத்தில் பேசியுள்ளேன், என்றார்.