(எம்.எப்.எம்.பஸிர்)

அரச  சொத்துக்களை தவறாக  பயன்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டில் அண்மையில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் காணி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கவிடம் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று நாலரை மணிநேர சிறப்பு விசாரணையை நடத்தினர்.

நேற்றுக் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2.30 மணிவரையே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

டி.பி. ஏக்கநாயக்க கலாசார அமைச்சராக இருந்தபோது அமைச்சின் வாகனமொன்றினை தேரர் ஒருவருக்கு வழங்கியதனூடாக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறியே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.