சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன மேலதிக சிகிச்சைகளுக்காக இன்று காலை சிங்­கப்­பூ­ரிற்கு அழைத்துச் செல்­லப்­ப­ட்டுள்ளார்.

இன்று காலை 9.20 மணியளவில் விசேட விமானம் ஒன்றில் அவருடன் 6 பேர் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.  

திடீர் சுக­வீ­ன­முற்ற நிலையில் நேற்று மாலை கொழும்பு தனியார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட இவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ர­விற்­க­மைய இன்று காலை மேல­திக சிகிச்­சைக்­காக சிங்­கப்­பூ­ருக்கு அழைத்துச் செல்­லப்­ப­ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(kapila)