காலி பத்தேகம நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகள் 6 பேர் தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இன்று காலி சிறைச்சாலையிலிருந்து பத்தேகம நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகளே இவ்வாறு தப்பியோடியுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.