(எம்.மனோசித்ரா)

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோனைக்கு அமைவாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கு  கல்வி அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண, வலய மற்றும் பிரதேச மட்டங்களில் பாதிப்படைந்த பாடசாலைகள் மற்றும்  மாணவர்களின் சேத விபரங்கள் குறித்து அறிக்கையிடப்படவுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்கள் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவும் உள்ளது.

இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட சேத விபரங்களுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கற்ப்பித்தல் உபகரணங்களும் வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்களை உடனடியாக நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் போன்ற பணிகளும் இக் குழுவினால் முன்னெடுக்கப்படும் என்றார்.