பாகிஸ்தானின் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பிரதமராக நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

நசீர் உல் முல்க் இதற்கு முன் தேர்தல் ஆனணக்குழுவின் இடைக்கால தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில், பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி,  மக்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.