தமிழ் திரையுலகிற்கு ஏராளமான புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனம் விரைவில் தன்னுடைய நூறாவது படத்தை தயாரிக்கவிருக்கிறது. அதில் இளைய தளபதி விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து நடிகர் ஜீவாவிடம் கேட்டபோது,‘ எங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் நூறாவது படத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் நாங்கள் மூன்று படங்களை தொடங்கவிருக்கிறோம். அதில் விஜய் நடிக்கும் நூறாவது படமும் அடங்கும். அந்த படத்தில் நானும் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.’ என்றார்.
நடிகர் ஜீவா தற்போது கொரில்லா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஜிப்ஸி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM