மூன்று பிள்ளைகளின் தாயை துடிக்கத் துடிக்க தீவைத்துக் கொன்ற கொடூரன்

Published By: Robert

20 Feb, 2016 | 09:19 AM
image

மத்­திய மாகா­ணத்தில் கண்டி மாவட்­டத்தில் தெல்­தெ­னிய பொலிஸ் பிரிவில் உள்­ளது கும்­புக்­கந்­துர எனும் அழ­கிய கிராமம். முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட இந்த கிரா­மத்தின் “பஹ­ல­கம்­மெத்த” பகு­தியில் கடந்­த­வாரம் இடம்­பெற்ற கொடூரம் ஒரு கணம் முழு தேசத்­தையும் பேசச் செய்­தது.

ஆம். பாத்­திமா சியாரா என்ற இளம் தாயை துடிக்கத் துடிக்க பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்ற அந்த கொடூ­ரத்தை எழுதும் போது பேனையே நடு­ந­டுங்­கு­கி­றது.

அது கடந்த 11 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை சியாரா தனது மூன்று வயது மக­ளுடன், தனது உற­வுக்­கா­ர­ரான மொஹமட்(பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) மற்றும் அவர் மனைவி அஸ்­மியா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) ஆகி­யோரை அழைத்துக் கொண்டு தான் ஏற்­க­னவே வாட­கைக்கு இருந்த வீட்டைக் கட்ட கும்­புக்­கந்­துர, பஹல கம்­மெத்த பகு­திக்கு சென்­றி­ருந்தார். கணவன் வெளி­நா­டொன்றில் வேலை செய்­து­வந்த நிலையில், தனது 10 வய­தான மூத்த மகளும் 7 வய­தான இரண்­டா­வது பிள்­ளையும் பாட­சா­லைக்கு சென்­றி­ருந்த நிலை­யி­லேயே மூன்­றா­வது பிள்­ளை­யுடன் உற­வுக்­கா­ரர்­க­ளையும் அழைத்துக் கொண்டு சியாரா அவ்­வி­டத்­துக்கு சென்­றுள்ளார். அதா­வது பஹல கம்­மெத்த பகு­தியில் சில வாரங்­க­ளுக்கு முன்னர் தான் வசித்த வாடகை வீட்டை அந்த உற­வுக்­கா­ரர்­க­ளுக்கு வாட­கைக்கு வழங்­கு­வதே சியா­ராவின் நோக்­க­மாகும். இதற்­கா­கவே அவர் அங்கு சென்­றி­ருந்தார்.

அந்த வாடகை வீடா­னது, ஒரு சுவ­ரி­னால் பிரிக்­கப்­பட்ட வீட்டின் பகு­தி­யொன்­றே­யாகும். அதன் முன்னால் சியா­ராவும் வாட­கைக்கு பெற­வந்த உற­வுக்­கா­ரர்­களும் பேசிக் கொண்­டி­ருந்த போது, பிரிக்­கப்­பட்ட வீட்டின் மறு புறத்தில் வசித்­து­வந்த ரியால் மண்­வெட்­டி­யுடன் திடீ­ரென ஏசிக்­கொண்டே வந்து சியா­ராவை மண்­வெட்­டியால் தாக்­கி­யுள்ளார். இதன் போது அருகில் இருந்த மொஹ­மட்­டையும் அவர் தாக்­கி­யுள்ளார்.

ரியாலின் மண்­வெட்டி தாக்­கு­தலால் நிலை தடு­மாறி சுமார் 1 மீற்றர் வரை­யி­லான பள்­ளத்தில் சியாரா விழுந்­துள்ளார். மறு­க­ணமே வீட்­டுக்குள் ஓடிச் சென்று ‘கேன்’ ஒன்றை தூக்­கி­வந்­துள்ள ரியால் விழுந்து கிடந்த சியாரா மீது அதி­லி­ருந்து பெற்­றோலை ஊற்றி நெருப்பு வைத்­து­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார். இதன்­போது சியா­ராவை தீயி­லி­ருந்து காப்­பாற்ற அருகில் இருந்­த­வர்கள் முயற்­சித்­துள்ள போதும் அவ்­வி­டத்­தி­லே­யே அந்த இளம் தாய் துடி­து­டித்து உய­ிரி­ழந்­துள்ளார்.

இதுதான் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஸ்தலம் விரைந்த தெல்­தெ­னிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் எம்.எம். நிஸங்க கொட முன்­ன­வுக்கு கிடைத்த ஆரம்­ப­கட்ட தக­வல்­க­ளாகும்.

இதனைத் தொடர்ந்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி திஸா­நா­யக்க, கண்டி பிரதி பொலிஸ்மா அதிபர் பெர­முன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் காமினி எல்­ல­பொல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ராஜ­ப­க் ஷவின் நேரடி கட்­டுப்­பாட்டில் தெல்­தெ­னிய பொலிஸ் பொறுப்­ப­தி­காரி, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸங்க கொட முன்­னவின் ஆலோ­சனை மற்றும் வழி­காட்­டலின் கீழ் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் பெரேரா தலை­மை­யி­லான உப பொலிஸ் பரி­சோதகர் நவ­ரட்ண, பொலிஸ் சார்ஜன் குல­துங்க (17931) பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் கீதா (2089) உள்­ளிட்ட குழு­வி­னரால் இது குறித்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

சம்­ப­வத்­தை­ய­டுத்து உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ராஜபக் ஷவும், பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸ்­ஸங்­கவும் பல மணி நேரம் சம்­பவ இடத்­தி­லேயே இருந்­த­வாறு தேவை­யான அத்­தனை தக­வல்­க­ளையும் சேக­ரித்­தனர்.

இத­னி­டையே முழு கும்­புக்­கந்­துர கிரா­மமும் சம்­பவ இடத்தில் கூடி­யது. அத­னை­விட பாட­சாலை சென்­றி­ருந்த சியா­ராவின் பிள்­ளை­களும் சம்­ப­வத்தை நேரி­லேயே கண்ட 3 வய­தான மகளும் தாயின் பிரிவில் அழுத காட்சி அங்கு கூடி­யி­ருந்த அனை­வ­ரது மன­தையும் உருக்கி கண்­ணீரை வர­வ­ழைத்­தது. உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ராஜ­பக் ஷ, தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் நிஸ்­ஸங்க ஆகியோர் கூட ஒரு கணம் கண் கலங்­கிய நிலையில் அந்த பிள்­ளை­களை அர­வ­ணைத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்­நி­லையில் தான் இக்­கொ­லையை நேரில் கண்ட சாட்­சிகள் இரண்டு (மொஹமட், அஸ்­மியா) உள்ள நிலையில் அதன் பிர­காரம் சந்­தேக நப­ரான ரியாலை கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

உண்­மையில் சந்­தேக நப­ரான ரியாலும் கொலை செய்­யப்­பட்ட சியா­ராவும் ஒரே வீட்டில், இரு பிரி­வு­களில் வெவ்­வே­றாக ஒரு காலம் வாழ்ந்­தவர்கள். அந்த வீடா­னது சந்­தேக நப­ரான ரியா­லுக்கும் அவ­ரது தம்­பிக்கும் சொந்­த­மா­னது. இந்­நி­லை­யி­லேயே அவ்­வீடு 2 ஆக பிரிக்­கப்­பட்டு தம்­பியின் பங்கு வாடகை அடிப்­ப­டையில் அப்­போது சியா­ரா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

வீட்டின் நடுவில் எழுப்­பப்­பட்ட சுவரின் ஒரு புறத்தில் சியா­ராவும் மறு புறத்தில் ரியால் தனது மனைவி பிள்­ளை­க­ளு­டனும் வாழ்ந்து வர­லாயினர். ரியா­லுக்கு 7 பிள்­ளைகள். அவர்­களில் சிலர் பாட­சாலை கல்­வியை நிறைவு செய்­த­வர்கள்.

இந்­நி­லையில் அடிக்­கடி சியா­ரா­வுடன் ரியால் சண்­டை­யிட்டு வந்த நிலையில் அது தொடர்பில் தெல்­தெ­னிய பொலிஸ் நிலை­யத்தில் பல முறைப்­பா­டுகள் உள்­ளன.

தொழில் அடிப்­ப­டையில், ரியால் இறைச்­சிக்­காக மாடு­களை கடைக்­கா­ரர்­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் பணியில் ஈடு­பட்டு வரும் நிலையில், கள­வாக மாடு­களை இறைச்­சிக்­காக கொண்டு சென்­றமை தொடர்­பிலும் அவ­ருக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் செய்யப்பட்டிருந்தன.

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் ஒரு நாள் ரியால், சியாரா தனி­மையில் இருந்த சமயம் அவ­ளது கையைப் பிடித்து இழுத்­துள்ளார். இது குறித்த முறைப்­பாடும் தெல்­தெ­னிய பொலி­ஸா­ருக்கு கிடைக்க, அதனை விசா­ரணை செய்த பொலிஸார் ரியாலை கைது செய்­துள்­ளனர். அது தொடர்­பிலும் அவரை 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கவும் நீதி­மன்றில் பொலிஸார் கோரி அத­னையும் அமுல் செய்­துள்­ளனர்.

அதனை தொடர்ந்து சியா­ரா­வுக்கு பொலிஸார் சில ஆலோ­ச­னை­களை வழங்­கி­யுள்­ளனர். சிறிய வயது பிள்­ளைகள் உள்­ளதால் கூலிக்கு இருக்கும் அந்த வீட்­டி­லி­ருந்து வேறு வீட்­டுக்கு செல்­லு­மாறு அவர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.

இதனை ஏற்­றுக்­கொண்டு சியா­ராவும் அங்­கி­ருந்து சுமார் 1½ கி.மீ.தூரத்தில் பிறி­தொரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்­துள்ளார். இந்­நி­லை­யி­லேயே தான் இடையில் கைவிட்டு விட்டு வந்த வாடகை வீட்டை பிறி­தொ­ரு­வ­ருக்கு (உற­வினர்) வழங்கும் நோக்­கோடு அங்கு சென்ற போதே இந்த கொடூர சம்­பவம் அரங்­கே­றி­யுள்­ளது.

இத­னை­விட சியாரா வீட்டில் தனி­மையில் இருக்கும் சந்­தர்ப்­பங்­களை, சந்­தேக நப­ரான ரியால், வீட்டு சுவரில் துளை­களை இட்டு அவ­தா­னிப்­ப­தா­கவும் தெல்­தெ­னிய பொலிஸில் முறைப்­பா­டுள்­ளது.

எனினும் அது தொடர்பில் விசா­ரணை செய்­து­வந்த பொலிஸார், அந்த வீட்டு சுவரில் பல துளைகள் இருப்­பதை அவ­தா­னித்த நிலையில்,அதனை ரியால்தான் இட்டார் என்­ப­தற்கு சான்­றுகள் இல்­லா­ததால் அவரை அது­தொ­டர்பில் கைது செய்­ய­வில்லை.

எனினும் ரியால், பெண் மோகம் கொண்ட நடத்தை ரீதி­யாக நல்­லவர் அல்ல என தெரி­விக்கும் பொலிஸார் அத­னா­லேயே அவ்­வி­டத்­தை­விட்டு வேறு இடத்­துக்கு செல்ல சியா­ரா­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லை­யில்தான் விளக்­க­ம­றி­யலில் இருந்து பிணையில் வெளியில் வந்த ரியால், சியா­ராவை கொலை செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. சியா­ராவை எரித்து கொலை செய்ய ரியால் திட்டம் தீட்­டி­ய­மை­யா­னது அவர் முன்­னேற்­பா­டாக பெற்­றோலை கொள்­வ­னவு செய்து வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட சாட்­சி­யங்கள் ஊடாக பொலி­ஸாரால் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­திட்­டத்தின் பிர­கா­ரமே சியாரா எரித்துப் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். சியா­ராவை தாக்க பயன்­ப­டுத்­திய மண்­வெட்டி, எரிந்த நிலை யில் இருந்த பெற்றோல் கொண்­டு­வ­ரப்­பட்ட கேன் ஆகி­ய­வற்றை பொலிஸார் வழக்குப் பொருட்­க­ளாக சேக­ரித்­துள்­ளனர்.

அத்­துடன் மொஹம்மட், அஸ்­மியா ஆகி­யோரின் சாட்­சி­யங்­களையும் 3 வய­தான சியா­ராவின் மகளின் சாட்­சி­யத்­தை யும் பொலி ஸார் வழக்கின் பிர­தான சாட்­சி­ய­மாக பெய­ரிட்­டுள்­ளனர்.

சம்­ப­வத்தை தொடர்ந்து ரியால், ஊரிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரைக் கைது செய்ய பொலிஸ் விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. ஊருக்கு சீருடை தரித்த பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக சிவில் உடையில் உளவுப் பிரி­வி­னரை கட­மையில் ஈடு­ப­டுத்­திய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நிஸங்க, ரியாலின் நண்­பர்­களை கண்­கா­ணிப்­பது, விசா­ரணை செய்­வது ஊடாக தகவல் பெற­லானார். அத்­துடன் ரியாலின் தொலை­பேசி இலக்­கத்தை பின் தொடர்ந்த போது ஒரு கட்­டத்தில் அதுவும் தோல்­வி­ய­டை­யவே, உளவுத் தக­வல்­களை மட்டும் மையப்­ப­டுத்தி சந்­தேக நபரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, சியா­ராவின் கொலையால் பொங்­கி­யெ­ழுந்த ஊரார் ரியாலின் வீட்டுக்குத் தீ வைத்திருந்தனர். அதனை அணைக்க பொலிஸார் கடும் பிர­யத்­தனம் மேற்­கொண்ட நிலையில், சந்­தேக நபர் மேல் உள்ள கோபத்தில் ஊரார் எவரும் அதற்கு உத­வ­வில்லை.

இந்­நி­லையில் சந்­தேக நபரின் உட­மைகள் தீயில் கருகி சாம்­ப­லா­யின. இந்­நி­லையில் தெல்­தெ­னி­ய­வுக்குள் காலடி எடுத்து வைக்க பயந்த ரியால், கடந்த செவ்­வாய்க்கிழமை (16 ஆம் திகதி) கண்டி பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இத­னை­ய­டுத்து தெல்­தெ­னிய நீதி­மன்றின் கைது உத்­த­ர­வுடன் கண்டி பொலிஸ் நிலையம் சென்ற தெல்­தெ­னிய பொலிஸார் சந்­தேக நப­ரிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இதன்­போது கொலை செய்­தது முதல், சந்­தேக நபர் ரயில் நிலை­யங்­க­ளி­லேயே காலத்தை கடத்­தி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. கொலை தொடர்பில் ஒப்­புதல் வாக்­கு­மூலம் ஒன்­றினை சந்­தேக நபர் வழங்­கி­யுள்ள நிலையில், கொலையின் பின்­ன­ரான காலப்­ப­குதி குறித்து சந்­தேக நபர் இவ்­வாறு வாக்­கு­மூ­ல­ம­ளித்­துள்ளார்.

"சேர்... கொலையின் பின் நான் முதலில் கண்­டிக்கு போனேன். கண்டி ரயில் நிலை­யத்தில் இருந்து கொழும்­புக்கு போனேன். கொழும்பில் இருந்து அட்டன் சென்றேன். பின்னர் கண்­டிக்கு வந்து அங்­கி­ருந்து தலை­மன்னார் சென்றேன். தலை­மன்­னாரில் இருந்து கண்­டிக்கு வந்து மீண்டும் கொழும்­புக்கு சென்றேன். இதன்­போது கையில் இருந்த காசு முடிந்­தது. இதனை தொடர்ந்து கையில் இருந்த தொலை­பே­சியை கொழும்பில் விற்­பனை செய்தேன். அதனை தொடர்ந்து கிடைத்த பணத்தில் மது அருந்­தினேன். பின்னர் கண்­டிக்கு வந்து பொலிஸில் சர­ண­டைந்தேன்" என விப­ரித்­துள்ளார்.

சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்­ற­வா­ளிகள் தண்­டனை சட்­டக்­கோ­வையின் பல பிரி­வு­களின் கீழ் பல­மான ஆதா­ரங்­க­ளுடன் தெல்­தெ­னிய மன்றில் பொலிஸால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் தெல்தெனியமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருந்த சியாராவின் கணவர் உடன் நாடு திரும்பியுள்ள நிலையில், தாயை இழந்த சின்னஞ்சிறுசுகளான தனது பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ளார்.

நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தனிமையிலோ அல்லது குடும்பத்துடனோ வாழும் பெண்கள், தனது சூழலில் உள்ள எதிர் மறையான விடயங்கள் நபர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இதுபோன்ற இன்னுமொரு கொடூரம் அரங்கேற முன்னர், இன்னுமொரு சியாரா பலியாவதற்கு முன்னர், கொடூரர்களுக்கு பாடமாக சந்தேக நபருக்கு விரைவில் அதிக பட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும். அத்துடன் தாயை இழந்துள்ள மூன்று பிஞ்சுகளின் எதிர்காலம் குறித்தும் காத்திரமான நடவடிக்கைகள் அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48