ஹட்டன் கார் விபத்ததுடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரண் 

By T Yuwaraj

28 May, 2018 | 02:21 PM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தடன்  தொடர்புடைய வாகன சாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் நேற்று இரவு 09.45 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 25 அடி பள்ளத்தினுல் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சாரதி இன்று காலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமையை தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right