(இரோஷா வேலு)

தங்கபிஸ்கட்டுகளுடன் ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்யை தினம் கைது செய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

224.35 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுக்களை தனது கைப்பையில் மறைத்து வைத்து சென்னைக்கு கடத்த முற்பட்டபோதே சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபருக்கு இன்று 2,50000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்டார்.