பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப்அலி சர்தாரி மக்கள் கட்சி சார்பில் அவரது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் போட்டியிடவுள்ளதாக சிந்து மாகாண முதலமைச்சர் சயீத் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார்.

இவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.