பண்டாரகமவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சிங்கள நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த வாகனம், முச்சக்கரவண்டியுடன் மோதியே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தையொன்றுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.