மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை  யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக  விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த  சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவரது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா என்ற விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.